தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர்.1 முதல் இதுவரை 1.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் செல்வம் தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார். அதில்.
நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகள் கணக்கில் இதுவரை ரூ.446 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.தஞ்சையில் இதுவரை 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 93 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்துள்ளது.
தஞ்சாவூரில் இதுவரை இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் இன்னும் 10 நாட்களில் கொள்முதல் பணிகள் முடிந்துவிடும்.



