தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை”

நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் ரூ.37,907 கோடி நிதி கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம். இதுவரை நெல்லை அல்வா தான் ஃபேமஸ், இப்போது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் ஃபேமஸ். நிவாரணம் வழங்காததை கண்டித்தோம், அப்போதும் ஒன்றிய அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்றபிறகுதான் ஒன்றிய அரசு ரூ.276 கோடி வழங்கியது.பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை;

மேலும் நெல்லைக்கு புதிய திட்டங்களை பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி அருகே 2291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.120 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். நெல்லை மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். பாபநாசம் கோயிலில் ரூ.5 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலப்பாளையத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.