தமிழகம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..

மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




