தமிழகம்
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது செய்யப்பட்டது வேதனை அளிப்பதாக கூறிய அவர் ஒன்றிய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு உண்மையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




