தமிழகம்
கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

..
ராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.476.136 கோடி நிதி மாநில நிதி ஆணைய மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




