தமிழகம்
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை. இன்று ரூ.640 உயர்ந்தது..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.72 800 க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரத்தில் இறங்கு முகத்தில் இருந்த தங்கம் நேற்று ரூ.600 இன்று ரூ .640 என ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.