தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்து.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்..

பண்ருட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில் லதாகுமாரி என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.