தமிழகம்
தைப்பூசம் நாளில் பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்படும்.

தைப்பூச தினத்தன்று பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை சில மங்களகரமான நாட்களில்அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொதுமக்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற 11 ம் தேதி தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக அணைத்து பத்திர பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும்,எனினும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.