தமிழகம்
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது. ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனிடையே டிசம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




