தமிழகம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வழக்கம்போல் உரிய காலத்தில் ஜூன்12 ல் பாசனத்திற்காக திறக்கப்படுவது இது இருபதாவது முறையாகும். முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து வைத்த மு க ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார். குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு; நீர் திறப்பால் டெல்டா மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீரின் அளவு பின்னர் படிப்படியாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.