Uncategorized
கோவை மாணவி பாலியல் வழக்கு: வாழ்நாள் சிறை தண்டனை.

- கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி இன்று பிற்பகல் பரபரப்பு தீர்ப்பு கூறினார். கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன்(21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி(20) உள்ளிட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பு.



