தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜன.13, 14, ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.15 முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.




