தமிழகம்
கரூர் சம்பவம் தொடர்பாக பனையூர் தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பஸ்ஸில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது இதனால் தவெக அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




