
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் சாமிநாதனுக்கும் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் துணைச் செயலாளர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.




