2024 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சுற்றுச்சூழல் விருதுகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான “சுற்றுச்சூழல் விருதுகள்” வழங்கி கௌரவிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.
விருதுகளின் விவரம்
1)சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி
2)சுற்றுச்சூழல் பாதுகாப்பு
3) சுற்றுச்சூழல் மேலாண்மை
4) சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை
விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள்
1) விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
3) கடந்த 01.01.2024 முதல் 31.12.2024 வரையிலான காலத்தின் பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும்.
4) சுற்றுச்சூழல் மேலாண்மை (அ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர்/நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள்/ பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.
5) ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் / நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
6) மேற்கண்ட மூன்று பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தகுதியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்கள் /நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட விருதுகளுக்காக விண்ணப்பிக்கும் தனிநபர்கள் / நிறுவனங்கள். தமிழ்நாடு விருதுகள் (http://awards.tn.gov.in) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணைவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 25.10.2025 முதல் 14.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் அல்லது நேரிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.




