தமிழகம்
தஞ்சையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு..

தஞ்சை மன்னர் சரோபோஜி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இம்முகாமானது 10-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுனர்கள் தங்களது விபரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




