தமிழகம்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்..

வருகின்ற அக்டோபர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




