தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் தவெக கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தவிர, வெளி மாவட்டங்களில் இருந்து 1 காவல்துனை கண்காணிப்பாளர்,2 ஆய்வாளர்கள், எட்டு உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள் 20 அதிவிரைவு காவல் படை வீரர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக அதிகாரிகள் காவல்துறை என மொத்தம் 66 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், தவெக கூட்டத்திற்கு அதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 10000 பேர் வருவார்கள் என்று சொல்லி இருந்தாலும் அதைவிட கூட்டம் அதிகமாகும் என்று பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது.




