தமிழகம்
நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடந்து வருகிறது. சட்ட விரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.