தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,12,960க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கு விற்பனையாகிறது.




