அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்.. போலீஸ் சொன்ன தகவல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை போலீசார் அளித்த விளக்கத்தில், அண்ணா பல்கலையில், 2ம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பெண் மாணவி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். 24.12.2024 அன்று அவர் எழுத்துப்பூர்வ புகாரை அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
23.12.2024 அன்று இரவு 7.45 மணிக்கு தன் காதலனுடன் இருந்தபோது,அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், இரண்டு ஆண்கள் தன் காதலனையும் தன்னையும் திடீரெனத் தாக்கியதாகக் குறிப்பிட்டு உள்ளார். இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த 2 பேர் அந்த மாணவியை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும்,அவருடன் “வேறு வழியாக” உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது..இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேக நபர் ஒருவரும் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமாக அந்த 2 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
