பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் 30.09.25 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர்
சி .தட்சிணாமூர்த்தி தலைமை வைத்தார்.

நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கே செல்வகுமார் முன்னிலை வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
என் வீரமணி அனைவரையும் வரவேற்றார்.பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் என் எஸ் எஸ் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.

பின்னர் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம், தஞ்சாவூர் உதவி கோட்ட பொறியாளர் டி.எஸ்.குலசேகரன் திருவாரூர் சீனியர் செக்சன் இஞ்சினியர் பிரேம் குமார் ,வர்த்தக ஆய்வாளர் சக்தி, பட்டுகோட்டை ரயில் நிலைய கண்காணிப்பாளர்
பி பார்த்திபன், நிலைய அதிகாரி பிரசாந்த், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மணிவண்ணன் ரயில்வே காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ் வேழவேந்தன் ,பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், துணை தலைவர் வே ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு இந்தியன் ரயில்வேயின் சிறப்பான சேவைகள், ரயில்கள் இயங்கும் முறை, ரயில்வே பாதுகாப்பு ,ரயில் ஒன் செயலி பற்றி விளக்கம் அளித்தனர்