தமிழகம்
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்..புதிய அறிவிப்பு.

காசோலையை பணமாக்க தற்போது 2 நாள் வரை ஆகிறது. எந்த வங்கி செக் ஆக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து, இன்று முதல் காசோலைகள் ஒரே நாளில் கிளியர் ஆகும் என தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி.எப்.சி , ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன. இன்று முதல் காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கிளியர் ஆகும்.
ஜனவரி முதல் செக் கொடுத்த 3 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட வங்கி அந்த பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.