
2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எந்தெந்த திட்டகள் செயல்படுத்த உள்ளது என்பதை கூறினார் .அதில் அவர், இந்தியாவில் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.ரூ. 2 கோடியில் சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில்
தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டம். மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு,பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும், மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம் உலகளவில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.1 கோடி அறிவிப்பு,
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்,
சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள்ரூ.600 கோடியில் 25,000 வீடுகள்!ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்!
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
ரூ.675 கோடி மதிப்பீட்டில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்!எனவும் இதில் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் கூறினார். திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூ.400 கோடியில் திட்டம் தொடங்கப்படும்
சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்; 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு!
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!
ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேலான நிதியை மத்திய அரசு தராமல் வைத்து வஞ்சிக்கும் நிலையிலும் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அந்தத் தொகையை தமிழ்நாடு அரசு தனது சொந்த பணத்திலிருந்து செலவு செய்யும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு