Uncategorized
பட்டுக்கோட்டையில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெட்சத்தோப்பு பகுதியில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சோதனையின் போது போலி பதிவு எண் கொண்ட காரில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் காரில் வந்த வட மாநில நபர்களை போலீசார் கைது செய்தனர்.