தமிழகம்

விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி-யிடம் வைத்த 5 கோரிக்கைகள்!

  1. திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு

விஜய் அவர்களின் வாகனத்திற்கு அருகில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் (இருசக்கர வாகனங்களும் உட்பட) வர முடியாத அளவிற்கு போலீஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் மொபைல் ரோந்து அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  1. விமான நிலையத்தில் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு

திருச்சி விமான நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைப் பாதுகாக்க ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  1. கரூர் நிகழ்வு இடம் சுற்றி பாதுகாப்பு

கரூரில் விஜய் பங்கேற்று நிதியுதவி வழங்கும் இடத்தைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், ஏற்பாட்டாளர்களும், பாதுகாப்பு குழுவும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

  1. நிகழ்வுக்கு கட்டுப்படுத்தப்பட்ட ஒருவழி நுழைவு

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரே நுழைவு மற்றும் வெளியேறும் வழி இருக்க வேண்டும். உள்ளே வரும் நபர்கள் முன்பே பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் அனுமதி சீட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  1. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை

விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அணுக அனுமதி வழங்க கூடாது.

இவ்வாறு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு விஜய் தரப்பிலிருந்து டிஜிபியிடம் மனு அளித்ததாக தகவல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button