தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 138.40 மிமீ மழை பதிவு..

தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி அளவிற்கு வெயில் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 138.40 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.