தமிழகம்
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி

இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து தெரியவில்லை.
தீப்பிடித்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

கார் தீ பிடித்ததன் காரணம் குறித்து பட்டுக்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீப்பிடித்த செய்தி அறிந்து பட்டுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விலை உயர்ந்த கார் தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது பொதுமக்கள் மற்றும் கார் உரிமையாளரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது