தமிழகம்
அம்மாபேட்டை சாலையில் வாழைமரம் நட்டு போராட்டம்

அம்மாபேட்டை அருகே வடக்கு தோப்பு புளியங்குடியில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை மரம் நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.