தமிழகம்
உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி

2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர் 19 முதல் 25 வரை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636-இல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.




