தமிழகம்
500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்..

பெருமகளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லைன் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.




