தமிழகம்
தஞ்சை மாவட்ட போலீசார் அதிரடி: 6 பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், பட்டுக்கோட்டை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 753 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள்களை கடத்தி வைத்திருந்த திருநாவுக்கரசு, மகேந்திரன், கார்த்திக், அப்துல்லா, சுரேஷ், காமராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.




