தமிழகம்
சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த தஞ்சை சரக டிஐஜி..

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு தஞ்சையில் குற்றவாளிகளை கைது செய்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை மற்றும் தனிப்பிரிவு மற்றும் தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர்
அருண் உள்ளிட்ட காவல்துறையினருக்கு தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர்
சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதுபோல் எப்போதும் துரிதமாக காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.