தமிழகம்

வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்.

How to fill voters Enumeration form 2025

ஸ்டெப் 1

அந்த படிவத்தில் ஏற்கெனவே உங்கள் பெயர், வாக்காளர் அடையாள எண், முகவரி, தொகுதி பெயர். வாக்குச்சாவடி எண் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதனுடன் உங்கள் புதிய புகைப்படம் ஒட்டும் இடமும் இருக்கும் அங்கு உங்கள் புகைப்படத்தை ஓட்டவும்.

ஸ்டெப் 2

அடுத்து அதன் கீழே உங்கள் பிறந்த தேதி பதிவிடவும். அதன்பின்பு அதன் கீழே உங்கள் ஆதார் எண், மற்றும் அதன் கீழ் உங்கள் மொபைல் எண் பதிவிடுங்கள்

ஸ்டெப் 3

அதன் பின்பு உங்கள் தந்தை பெயர் மற்றும் வாக்காளர் அட்டை எண் பதிவிடவும் (இல்லை என்றால் இல்லை என்று எழுதவும்)

அதன் கீழே உங்கள் தாயார் பெயரைச் சரியாக பதிவிடவும் அடுத்து அவரது வாக்காளர் அட்டை எண் பதிவிடவும் ( இல்லை என்றால் இல்லை என்று எழுதவும்)

அடுத்து அதன் கீழ் உங்கள் கணவர்/ அல்லது மனைவி பெயரை வாழ்க்கைத்துணையின் பெயர் மற்றும் அவர்களின் வாக்காளர் எண் விவரங்களை நிரப்ப வேண்டும்.

ஸ்டெப் 4

அடுத்து அதன் கீழ் வலதுபக்கம் மற்றும் இடது பக்கம் இரண்டு அட்டவணை இருக்கும்

அதில் வலது பக்கம் உள்ள அட்டவணையில் நீங்கள் 2002ஆம் ஆண்டில் வாக்களித்திருந்தால் அந்த வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக குறிப்பிடுங்கள்.

அதாவது உங்களுடைய பெயர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்

நீங்கள் 2002 ம் ஆண்டு வாக்கு செலுத்தாமல் உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார் வாக்கு செலுத்தி இருந்தால் அந்த படிவத்தின் இடது பக்கம் உள்ள அட்டவணையில் அவர்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக குறிப்பிடுங்கள்.

அதில் உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

கடைசி ஸ்டெப்.

படிவத்தை கவனமாக நிரப்பி கையொப்பமிட்டு, டிசம்பர் 4க்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

குறிப்பு:-

2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.

ஆனால் 2002 பட்டியலில் உங்கள் பெயர் அல்லது பெற்றோரின் பெயர் இல்லையெனில் அடையாள ஆவணங்களை வழங்க வேண்டும்.

சந்தேகங்கள் இருந்தால் படிவத்தில் உள்ள அலுவலரின் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button