தமிழகம்
பழஞ்சூரில் மாநில அளவிலான கபடி போட்டி..

பழஞ்சூர் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 52 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கபடி போட்டி இந்த ஆண்டு அமச்சூர் கபடி கழகத்தின் விளையாட்டு விதிகளின் படி நடத்தப்பட்டது. போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொத்தம் 64 அணிகள் பங்கேற்று விளையாடினர். முடிவில் முதுகுளம் அணியினர் முதல் பரிசையும், செல்வ விநாயகர் அணியினர் இரண்டாம் பரிசையும், பேராவூரணி அணியினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.





