தமிழகம்
தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கை..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




