தமிழகம்
கரூர் துயரம் – FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

- காலை 9 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தவெக தலைவர் விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் வரத் தொடங்கினார்கள்.
- இதனால் வேலுச்சாமிபுரம் மெயின் ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்ஷன், திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை-சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிக அளவில் வரத் தொடங்கினார்கள்.
- தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதிக கொடுத்துள்ளனர் ஆனால் பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் 25,000 மேற்பட்டோர் வந்தனர்.
- இந்நிலையில் மாலை 4.45 மணிக்கு விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்தார்,
- அனுமதி இல்லாமல் ரோட்ஷோ பல்வேறு இடங்களில் நடத்தி பொது மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறினார்
- காலதாமதம் செய்து மாலை 6:00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்ஷன் ராங் ரோட்டில் விஜய் வாகனங்களை அழைத்துச் சென்று மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்ஷனில் தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தினார்
- அங்கே வாகனத்தை சிறிது நேரம் நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர் என்று இருந்தது.