2 நாள் பயணம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை விசிட்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை தருகிறார். 2 நாள் பயணமாக நெல்லை வரும் முதல்வர் ஸ்டாலின், சுமார் 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்தோறும் சென்று கள ஆய்வு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும் வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லை செல்கிறார். 2 நாள் பயணமாக நெல்லை வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், இன்றும் நாளையும் கள ஆய்வு பணிகளை செய்கிறார்.

lஇதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்டான் சிப்காட் செல்கிறார். அங்கு ரூ.4,400 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கும் டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் பின்னர் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.