தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ் சம்பா, தாளடி பருவ நெற்பயர்களுக்கு விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.




