தமிழகம்
தஞ்சையில் குட்கா விற்ற 2 பேர் கைது..

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோஜிப்பட்டி, உப்பரிகை அருகே மளிகை கடையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவலர்கள் மளிகை கடையில் சோதனை செய்து இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 112 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.




