தமிழகம்
தஞ்சையில் ஐந்து இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..

தஞ்சாவூரில் கலைஞர் நகரை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் முன்விரதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்புடைய ஹரிஹரன்,சஞ்சய்,சக்தி, கோகுல், பிரபாகரன் ஆகிய ஐந்து இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.




