தமிழகம்
வள்ளலார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்..

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதியுடன் இயங்கும் மதுபான கூடங்கள் என அனைத்திலும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மது விற்பனை நடைபெறாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.