தமிழகம்
அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வடகரையில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஒரு கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.