தமிழகம்
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..

பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று எட்டு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள் ஆகியோர் நேற்று பாராட்டினார்கள்.




