தமிழகம்

காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மகாத்மா காந்தியின் 156 வது ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் நகர் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு காந்தி முக கவசம் அணிந்து 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட கின்னஸ் மாரத்தான் நிகழ்வினை மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்துடன் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் சார்பில் நடைப்பெற்றது.

இதில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.பி யுமான மாண்புமிகு மாதேஸ்வரன் அவர்களும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. இராமலிங்கம் அவர்களும் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சுந்தரம் காவல் ஆய்வாளர் நாமக்கல் டவுன், பாலுசாமி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் டிராபிக் மற்றும் போக்குவரத்து போலீசார்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்கத்தின் தேசிய தலைவரும் நிறுவனருமான சமூக சேவகர் டாக்டர்.சுரேஷ் அவர்களும் தேசிய பொது செயலாளர் லிவிங்டன் தாஸ், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதன்ராஜ் அவர்களும் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அவர்களும், ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் க. முத்துசாமி (எ) முத்துசூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ், மெடல் மற்றும் சீல்டு, டீ சர்ட் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button