சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மாம்பலம் சிவாஜி ரவி தலைமையில் அக்டோபர் 1 தியாகராயர் மஹால் தி நகர், சென்னையில் மிக பிரமாண்டமாக லட்சுமணன் சுருதி மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாம்பலம் சிவாஜி ரவி, கும்பகோணம் சிவாஜி சேகர் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் கலந்து கொண்டார் மற்றும் சிவாஜி தீவிர ரசிகர் சமூக ஆர்வலர் ரமேஷ், மனோகரன், கர்ணன் ரீ டிஜிட்டல் ரிலீஸ் சொக்கலிங்கம், ஸ்ரீ ஆர் ஆர் மூவிஸ் தயாரிப்பாளருமான மற்றும் தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மற்றும் தமிழ்நாடு கர்நாடகாதமிழ்நாடு கர்நாடகா திரைப்பட விநியோகிஸ்தர் தீவிர நடிகர் சிவாஜி கணேசன் பக்தன் டாக்டர் ஆர் ஆர், சிவாஜி வீரா அக்கா, ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் க முத்துசாமி (எ) முத்துசூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மதியம் 1 மணி முதலே அன்னதானமும் நடைபெற்றது. சென்னை மாநகர சிவாஜி கணேசன் ரசிகர்கள் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி அவர்களை போற்றி மகிழ்ந்தனர்.