தமிழகம்

மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன்-நீதிபதி பரத்குமார்..

  • தவெக தொடர்ந்த வழக்கில் கரூர் நீதிபதி பரத்குமார்.

விஜய் பரப்புரையைக் காண 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு – நீதிபதி பரத்குமார்.

முதலமைச்சர் மற்றும் மற்றக் கட்சித் தலைவர்களுடன் விஜயை ஒப்பிடக்கூடாது – நீதிபதி பரத்குமார்

டாப் ஸ்டாரான விஜயை காண 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? – தவெக தரப்புக்கு நீதிபதி பரத்குமார் கேள்வி

எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது; மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன் – நீதிபதி பரத்குமார்.

3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏதும் நடந்திருக்காது – டிஎஸ்பி செல்வராஜ்.

நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்கு சொல்லவில்லையா? – தவெகவுக்கு நீதிபதி கேள்வி.

கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை – நீதிபதி.

கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், ஆனால் பொதுமக்களை தடுக்க வேண்டியது காவல்துறைதான் – தவெக தரப்பு.

ஐதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் வழக்கை மேற்கோள் காட்டி நீதிபதி பரத்குமார் கேள்வி.

அசாதாரண சூழல் இருந்தால் பரப்புரையை நிறுத்தலாம் என்று நிபந்தனை உள்ளது; அதை காவலர்கள் ஏன் செய்யவில்லை – தவெக தரப்பு.

அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும் காவலர்கள் கட்டுப்படுத்தவில்லை – தவெக தரப்பு.

பரப்புரை இடத்தில் சாக்கடைக் குழி, வெறும் அட்டை வைத்தே அடைத்து வைக்கப்பட்டிருந்தது – தவெக தரப்பு.

கரூரில் விஜயின் கூட்டத்திற்கு வந்தது தவெகவினர் இல்லை; சாதாரண மக்கள் – தவெக தரப்பு.

கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது – கரூர் நீதிபதியிடம் தவெக வாதம்.

அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா? – கரூர் நீதிபதி கேள்வி

அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள்; தவறு யார் மீது உள்ளது சொல்லுங்கள் – கரூர் நீதிபதி

அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா?-கரூர் நீதிபதி கேள்வி

பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் என்றேன்; ஆதவ் அர்ஜூனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார் – டிஎஸ்பி விளக்கம்.

முனுசாமி கோயில் பகுதியில் ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார்; அங்கே கேரவன் உள்ளே விஜய் சென்று விட்டார் – டிஎஸ்பி.

அங்கேயே விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்றிருக்கும் – டிஎஸ்பி விளக்கம்

விஜயின் பரப்புரை வாகனம் முன்னே சென்றபோது தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது – டிஎஸ்பி.

கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி தராதது ஏன்? – கரூர் நீதிமன்றம்

ரயில்வே பாலம் உள்ளதால் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி தரவில்லை – கரூர் நீதிபதியிடம் டிஎஸ்பி செல்வராஜ் விளக்கம்

கூட்டம் குறைவாக வரும் என ஏன் கணக்கிட்டீர்கள்? – கரூர் நீதிபதி கேள்வி

மைதானம் போன்ற பகுதியை தாருங்கள் என ஏன் கேட்கவில்லை – தவெக தரப்புக்கு நீதிபதி கேள்வி.

கூட்டம் குறைவாக வரும் என ஏன் கணக்கிட்டீர்கள்? – தவெகவிற்கு நீதிபதி கேள்வி.

விஜயை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள் – கரூர் நீதிபதி.

அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும்; நீங்கள் கேட்ட 3 இடமுமே கூட்டத்திற்கு போதுமானது அல்ல – கரூர் நீதிபதி.

எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பும் வருவார்கள் – நீதிபதி.

காலாண்டு, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் மக்கள் குறைத்து வருவார்கள் என கணக்கிட்டீர்கள் – நீதிபதி.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது – அரசு தரப்பு

கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது – கரூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்.

41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் – அரசு தரப்பு.

கைது செய்யப்பட்ட தவெகவின் இரு மாவட்டச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கரூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்.

ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் யாரையும் கைது செய்யக் கூடாது – தவெக தரப்பு.

விஜய் பரப்புரைக்கு வந்தது தானாக வந்த கூட்டம்; வண்டி வைத்து அழைத்து வரவில்லை – தவெக தரப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button