தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால் நிலையம் அமைத்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் நேரடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.




