தமிழகம்
தஞ்சாவூரில் சைக்கிள் போட்டி..

தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி காலை 7:00 மணிக்கு சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்று கட்டாயம் வாங்கி வரவேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டியை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பதிவு செய்ய 04362-235633 என்ற எண்ணை அழைக்கலாம்.