தமிழகம்
மன்னார்குடி அருகே ரூ.7.42 லட்சம் மோசடி…

திருவாரூர் மாட்டம் ,மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவரை வாட்ஸாப்எண் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ. 7.42 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து அந்நபரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் திருவாரூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
